சென்னை: தமிழகத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்களில் (பார்கள்) பணிபுரியும் ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், 21 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் சிறார்களுக்கு எக்காரணத்தைக் கொண்டும் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயதை உறுதி செய்ய ஆதார் போன்ற ஆவணங்களை கேட்டு சரிபார்க்கலாம். 21 வயதிற்கு கீழ் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஊழியர்கள் மதுபானங்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குண்டர் சட்டத்தில் கைது…
டாஸ்மாக் கடைகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவோ அல்லது அதற்கு பிறகோ அதிக நேரம் மது விற்பனை செய்தாலும் சந்து கடைகள் மூலமாக விற்பனை செய்தாலும் குண்டர் சட்டம் மூலமாக கைது செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கூடுதல் விலைக்கு விற்றால்…: நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யும் பணியாளர்கள் மற்றும் அதை கண்காணிக்க தவறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
