காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் 2 இடம் மேலிட தலைவர்களிடம் முட்டிமோதும் 5 எம்எல்ஏக்கள்: விஸ்வநாதன், ராஜேஷ்குமாருக்கு வாய்ப்பு

சென்னை: காங்கிரஸ் கட்சிக்கு, தவெக அமைச்சரவையில் இரண்டு இடங்கள் ஒதுக்கப்படும் என்ற தகவலை தொடர்ந்து, மேலிட தலைவர்களிடம் வெற்றி பெற்ற 5 எம்எல்ஏக்கள் முட்டிமோதி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  விஜய் தலைமையிலான தவெக அரசில் தற்போது 9 அமைச்சர்கள் மட்டுமே பதவி ஏற்றுள்ளனர். விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவியை தருவதாக தவெக உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் யாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு காங்கிரசார் மத்தியில் எழுந்துள்ளது. அமைச்சர் பதவி என்பதால் வெற்றி பெற்ற 5 எம்எல்ஏக்கள் டெல்லி தலைவர்களை நேரில் சந்தித்து தங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று முட்டி மோதி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வெற்றி பெற்ற 5 எம்எல்ஏக்களில் சீனியர்களான விஸ்வநாதன், ராஜேஷ் குமார் ஆகியோருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories: