தேர்தல் முடிவுக்கான காரணம் என்ன? திமுகவினரே சொல்லுங்க; நான் கேக்குறேன்: வீடியோ வெளியிட்டு மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை பதிவிட்டு பேசியிருப்பதாவது: எல்லாருக்கும் வணக்கம். ஒரு சின்ன கேப்புக்கு பிறகு உங்ககிட்ட வீடியோவில பேசுறேன். கடைசியாக தொகுதி மறுவரையறை பற்றி பேசி இருந்தேன். அதை தொடர்ந்து தேர்தல் எல்லாம் நடந்து முடிஞ்சிருச்சு, ரிசல்ட்டும் வந்துச்சு. ரிசல்ட்டுக்கு பிறகு என்னவெல்லாம் நடந்துச்சு. என்ன நடக்குதுன்னு எல்லாத்தையும் பார்த்துட்டுதான் இருக்கோம். 2 வாரமா எல்லா வீடுகளிலேயும் நியூஸ் சேனல் தான் ஓடிட்டே இருக்கு. அந்த அளவுக்கு பரபரப்புக்கு பஞ்சம் இல்லாம போகுது.

2026 தேர்தல் முடிவுகளை எடுத்துக்கிட்டா, திமுக ஒரு பெரிய பின்னடைவை சந்திச்சிருக்கு. அதை நாம ஏத்துக்கிட்டுதான் ஆகணும். இது நிச்சயமா நாம எதிர்பார்த்த ரிசல்ட் இல்ல. இதுக்கு அவர் காரணம், இவர் காரணம்னு யாரும் யார் மேலயும் பழி போடாதீங்க. தலைவரா இந்த தோல்விக்கு நானே பொறுப்பேத்துக்கிறேன். வெற்றி கிடைக்கும்போது எனக்குத்தான் அந்த கிரெடிட் வந்து சேருது. அப்போ தோல்வி அடையும் போதும் அந்தப் பழியை நான் தான் ஏத்துக்கணும். அதுதான் ஒரு நல்ல தலைவருக்கான இலக்கணம்.

சரி, தோத்துட்டோம்னு அதையே நினைச்சுக்கிட்டு முடங்கிட மாட்டேன். உடனே அப்டேட் ஆகி மீண்டும் வருவேன். நாம எல்லாருமே அப்படித்தான் வரணும். அதுக்கு உங்களோட ஆலோசனைகள், பரிந்துரைகள், ஐடியாக்கள் எனக்கு வேணும். எலெக்சனா இருந்தாலும், கரெக்சனா இருந்தாலும் உங்ககிட்டதான் வந்தாகணும். மக்கள்தான் எல்லாம். இந்த தேர்தல் முடிவுகளுக்கு என்ன காரணம்? திமுக இன்னும் எப்படி எல்லாம் உங்களுக்காக உழைக்கணும்னு நீங்க நினைக்கிறீங்கன்னு சொல்லுங்க. உங்களோட கருத்துகளை ஓப்பனா சொல்லுங்க.

அதுக்காகத்தான் இந்த ‘உடன்பிறப்பின் குரல்’ வெப்சைட். இதுல உங்க கருத்துகளை பதிவிடுறது ரொம்ப சிம்பிள். உங்க வாய்ஸ்லயே பேசி கருத்துகளைச் சொன்னீங்கன்னா அதுவே டைப் ஆகிடும். நேரடியா நீங்களே டைப் பண்ணியும் சொல்லலாம், இல்லைன்னா நீங்க பேப்பர்ல எழுதி அந்த போட்டோவை அப்லோட் பண்ணலாம், டாக்குமெண்ட்டா அனுப்பலாம். உங்க கருத்துகள் எனக்கு வந்து சேர்ந்துடும்.

அதையெல்லாம் படிச்சுப் பரிசீலிச்சு, நம்ம அடுத்தகட்ட நடவடிக்கையை வடிவமைக்கப் போறேன். நம்முடைய அணுகுமுறை, சிந்தனை, செயல்பாடு எல்லாத்தையும் மாத்தி ஆகணும். காலத்துக்கு ஏத்த மாதிரி எவால்வ் ஆகித்தான் ஆகணும். உங்க கருத்துகளின் அடிப்படையில ‘டிஎம்கே 2.0’ வரும். கட்சியோட எல்லா லெவல்லயும் தேவையான மாற்றங்களைச் செய்யப் போறேன். இதனால அடுத்த 100 ஆண்டுகளுக்கும் இந்த இயக்கம் உயிர்ப்போடு இயங்கும், உங்களுக்காக இயங்கும். உடன்பிறப்பே நீங்க சொல்லுங்க, நான் கேட்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

Related Stories: