பிரதமர் மோடி 2 நாட்களுக்கு முன்பு மேற்கு ஆசிய போர் சூழல் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கொரோனா காலத்தில் உள்ள கட்டுப்பாடுகள் போன்று, வாகனங்களில் செல்வதை குறைத்துவிட்டு அனைவரும் வீட்டில் இருந்து பணியாற்ற முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து பிரதமர் மோடி தனது பாதுகாப்பு கான்வாய் வாகனங்களை பாதியாக குறைத்துள்ளார். இதேபோல், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தனது கான்வாய் பாதுகாப்பு வாகனங்களை பெருமளவு குறைத்துள்ளார்.
தமிழக முதல்வர் விஜய்க்கு அளிக்கப்படும் கான்வாயில் முன்னும் பின்னும் என 12 வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர அவரை பின் தொடர்ந்து துறை சார்ந்த அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் என மொத்தம் 20 வாகனங்கள் அவரது கான்வாயில் பயன்படுத்தப்படுகிறது. எரிபொருள் சேமிப்புக்கு முன் உதரணமாக தமிழக முதல்வரும் தனது பாதுகாப்பு வாகனங்களை பாதியாக குறைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
