ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

 

சென்னை: ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நிதித்துறை செயலாளராக இருந்த உதயச்சந்திரன், தொழில் முதலீட்டுக் கழக மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். Guidance Tamilnadu நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தாரேஸ் அகமது, சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தொழில் முதலீட்டுக் கழக மேலாண் இயக்குநராக இருந்த குமார் ஜெயந்த், தமிழ்நாடு காகித நிறுவனத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வணிகத்துறை சிறப்புச் செயலாளராக இருந்த பல்லவி பல்தேவ், சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: