தொழிலாளி மாயம்

 

தேன்கனிக்கோட்டை, மே 8: தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மேலூர் கிராமத்தில் வசிப்பவர் சிக்கண்ணா மகன் சிவராஜ் (28), ஓசூர் தனியார் தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு வனிதா(20) என்ற மனைவி உள்ளார். அவர் குழந்தை பிறந்து, தொட்டபேளூரில் உள்ள தாய் வீட்டில் உள்ளார். இந்நிலையில், கடந்த 3ம்தேதி சிவராஜ் மனைவி, குழந்தையை பார்க்க தொட்டபேளூர் கிராமத்திற்கு சென்றுள்ளார். பின்னர் பேளூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத் என்பவருடன் டூவீலரில் சென்று தேன்கனிக்கோட்டை பஸ் நிலையத்தில் இறங்கி பெங்களூர் செல்லும் தனியார் பஸ்சில் ஏறியுள்ளார். அதன் பின் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, வனிதா தேன்கனிக்கோட்டை போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Related Stories: