வியாபாரிகளை தாக்கி பணம் பறித்த 2 பேர் கைது; ஓசியில் நுங்கு கேட்டு

ஆரணி, மே 8: ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம், கன்னிகாபுரம், பொன்னம்பலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பனைமரங்களில் நுங்குகளை சேகரிக்கும் வியாபாரிகள் கடந்த சில வாரங்களாக ஆரணி டவுன் காந்தி சாலை, அண்ணாசிலை, பழைய, புதிய பஸ் நிலையங்களில் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆரணி டவுன் பழைய பஸ்நிலையம் காந்தி சாலையில் பெண் உட்பட 5 க்கும் மேற்பட்ட நபர்கள் வழக்கம்போல் நேற்று முன்தினம் நுங்கு விற்பனை செய்து வந்தனர். அப்போது, அங்கு மது போதையில் வந்த ஒரு வாலிபர் நுங்கு விற்பனை செய்து கொண்டிருந்த பெண்ணை மிரட்டி ஓசியில் நுங்கு வாங்கினார். தொடர்ந்து, அதேபகுதியில் நுங்கு விற்பனை செய்து வந்த பொன்ன மங்பலம் கிராமம் பஜனை கோயில் தெருவை சேர்ந்த சிவலிங்கம்(51), வியாபாரியிடம் அந்த வாலிபர் நுங்கு கேட்டார். அதற்கு, அவரும் நுங்குகளை கொடுத்து விட்டு பணம் கேட்டார்.

அதற்கு அவர் பணம் கொடுக்க முடியாது என கூறி மிரட்டி உள்ளார். பின்னர் அந்த வாலிபர் அவரது நண்பரை அழைத்து வந்து மீண்டும் அவரை காலால் உதைத்து ஆபாசமாக பேசி திட்டியுள்ளனர். இதனை சிவலிங்கம் தட்டிகேட்டதால், ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து சிவலிங்கத்தை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விற்பனை செய்து வைத்திருந்த ரூ.2400 பிடிங்கி கொண்டு அங்கிருந்த தப்பியோடினர்.

இதில் காயமடைந்த சிவலிங்கம் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று நேற்று ஆரணி டவுன் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் ஆரணி டவுன் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் விக்னேஷ் (29), மற்றும் திலக்குமார்(26), என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்து ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: