ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஆலங்குடி நூலகத்துக்கு மின்விசிறி வழங்கல்

புதுக்கோட்டை: ஆலங்குடி நூலகத்துக்கு மின்விசிறி வழங்கிய ஓய்வு பெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கிளை நூலகத்தில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. போட்டித் தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்களும் உள்ளதால் இங்கு, தினந்தோறும் போட்டித் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளும் புத்தகங்களை வாசித்து வருகின்றனர். இங்கு பயிற்சி பெற்ற பலரும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில், இந்நூலகத்துக்கு மின்விசிறி தேவை என நூலகத்தினர் கோரிக்கை தெரிவித்து இருந்தனர். அந்தக் கோரிக்கையை ஆலங்குடி காவல் நிலையத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு காவல் ஆய்வாளராக பணிபுரிந்தவரும், பின்னர் காவல் துணைக் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று , பணி ஓய்வு பெற்றுள்ள பன்னீர்செல்வம் தனது செந்த செலவின் மின்விசிறிவழங்கி உள்ளார். உதவி செய்த ஓய்வு பெற்ற காவல் துறை அலுவலர் பன்னீர்செல்வத்துக்கு நூலக அலுவலர்கள், வாசகர்கள், மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: