அன்னமங்கலத்தில் சூதாட்ட நபர்களிடம் பணம் பறிக்க முயற்சி 6 பேர் சிறையில் அடைப்பு

பெரம்பலூர், மே 8: அன்னமங்கலத்தில் ரம்மி விளையாடியவர்களிடம் பணம் பறிக்க முயன்ற 6 பேர் கொண்ட கும்பல் கைது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அன்னமங்கலத்தைச் சேர்ந்தவர் தர்மதுரை(35). இவர் தனது நண்பர்களுடன் ஊருக்கு அருகாமையில் உள்ள மரத்தடியில் ரம்மி (சூதாட்டம்) விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது பெரம்பலூரைச் சேர்ந்த ரவிகரன்(30), நவீன் குமார்(25), சரவணன்(27), ரியாஸ் அகமது(20), முகமது பைசல்(25), முகமது கனிஸ்(20) ஆகிய 6 பேர் அங்கு வந்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தவர்களிடம் எங்களுக்கு பணத்தை கொடுத்து விடுங்கள் இல்லையென்றால் கத்தியால் குத்தி விடுவேன் என கூறி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து தர்மதுரை அரும்பாவூர் போலீசில் புகார் செய்தார். புகாரையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து ரவிகரன், நவீன் குமார், சரவணன், ரியாஸ் அகமது, முகமது பைசல், முகமது கனீஷ் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். பின்னர் வேப்பந்தட்டையில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: