திருவெறும்பூர், மே 8: திருச்சி பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி வளாகத்தில் நாளை மற்றும் 10ம்தேதி தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு 2,753 பேர் தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். அண்ணா பல்கலைக்கழக திருச்சி உறுப்புக்கல்லூரியில் வளாகத்தில் முதுகலை பாடப்பிரிவு சேர்கைக்காக நாளை 9ம்தேதி மற்றும் 10ம்தேதி நடைபெறும் தமிழ்நாடு நுழைவு தேர்வில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக திருச்சி கலைஞர் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழக திருச்சி உறுப்புக்கல்லூரி கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு டிஎஎன்சி இடிசிஇ இ டி ஏ -முதுகலை 2026) எம்பிஏ, எம்சிஏ, மற்றும் எம்இ, எம்.டெக், படிப்புகளுக்கான தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு, பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி தேர்வு மையத்தில் நாளை மற்றும் 10ம்தேதி ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. எம்.சி.ஏ. படிப்பிற்கு 837 மாணவர்களும், எம்பிஏ படிப்பிற்கு 1513 மாணவர்கரும் எம்.இ. எம்.டெக் 403 மாணவர்கள் என திருச்சி பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழக தேர்வு மையத்தில் மொத்தம் 2,753 தேர்வர்கள் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக, கலைஞர் பேருந்து முனையம் மற்றும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என இத்தகவலை திருச்சி பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், கல்லூரி முதல்வர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் மகிழ்ச்சி தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு 2,753 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்
- தமிழ்நாடு பொது
- Thiruverumpur
- திருச்சி பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரி
- திருச்சி இணைப்புக் கல்லூரி
- அண்ணா பல்கலைக்கழகம்
