சாலை வழிமறித்து கேக் வெட்டி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்; வாகன ஓட்டிகள் கடும் அவதி வேலூரில் தவெக நிர்வாகி அட்ராசிட்டி

வேலூர், மே 8: வேலூரில் சாலை வழிமறித்து பிறந்த நாள் விழா கொண்டாடிய தவெக நிர்வாகியால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக கட்சி 108 இடங்களில் வென்று உள்ளதால் கூட்டணி ஆட்சி அமைக்க தீவிரம் கட்டி வருகிறது. இதுஒரு புறம் இருக்க அக்கட்சியினர் ஆட்சி அமைக்கும் முன்பே மாநிலம் முழுவதும் தவெகவினர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பஸ் நிலையத்தில் காரின் மேற்பகுதியில் அமர்ந்து கொண்டு பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் வட்டமிட்டு அட்ராசிட்டி செய்தனர்.

அதேபோல் சாலையில் ஆடு வெட்டிய சம்பவம், தவெக எம்எல்ஏக்கள் ஒருவர் வாளை கொண்டு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினர். மற்றொருவர் மது பாட்டிலுடன் நடனமாடுவது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அதன் ஒருபகுதியாக வேலூர் தீயணைப்பு நிலையம் எதிரே நேற்று முன்தினம் இரவு தவெக பகுதி செயலாளர் மணிகண்டனுக்கு பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நடந்தது. 100க்கும் மேற்பட்ட தவெகவினர் சாலை வழி மறித்தும் வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டு கேக் வெட்டி பிரியாணி வழங்கி கொண்டாடினர். இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். ஆட்சி அமைக்கும் முன்பே இப்படி தவெகவினர் தொடர் அட்ராசிட்டியில் ஈடுபடுவது பொதுமக்கள் இடையே அதிருப்தி அடைய செய்துள்ளது.

Related Stories: