அரூர், மே 8: தர்மபுரி மாவட்டம் அரூர் பெரியார் நகரைச் சேர்ந்தவர் நபிஷா (23). குமாரபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில், பி.டி.எஸ் 4ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் விடுமுறையில் வீட்டில் இருந்து வந்த மாணவி நேற்று முன்தினம் இரவு வெளியே சென்று வருவதாக கூறிச்சென்றவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து அரூர் போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாயமான மாணவியை தேடி
வருகின்றனர்.
