ஓட்டு போட சென்னை திரும்பினார் அஜித் குமார்

சென்னை: சட்டசபை தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதற்காக பலரும் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்து வருகின்றனர். மேலும், வெளிநாடுகளில் பணிபுரிந்து வருபவர்கள் பலரும் தேர்தலை முன்னிட்டு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில், நடிகர் அஜித்குமாரின் ரேஸிங் அணி, பெல்ஜியத்தில் நடைபெறும் உலகின் மிகச் சவாலான கார் பந்தயங்களில் ஒன்றான 24H Series-இல் கலந்துகொண்டு இரண்டாவது இடம் பிடித்துள்ளது. இதற்கு அஜித் குமாரின் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அஜித் குமார் கடந்த சில தினங்களாக பெல்ஜியத்தில் இருந்தார். இந்நிலையில், நேற்று காலை தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் விதமாக அஜித் சென்னை திரும்பியுள்ளார். இன்று திருவான்மியூரில் உள்ள பள்ளியில் அவர் ஓட்டு போட இருக்கிறார்.

Related Stories: