அட்சய திருதியை முன்னிட்டு பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

 

வேலாயுதம்பாளையம், ஏப். 21: அட்சய திருதியை முன்னிட்டு பரமேஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் அட்சய திதியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் மஞ்சள் திருமஞ்சனம் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது . பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Related Stories: