கரூர், ஏப். 20: தேர்தலைமுன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறையளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட கலெக்டர் ரவிகுமார் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு வருகின்ற 21.04.2026 – அன்று காலை 10.00 மணி முதல் வாக்குப்பதிவு நாளான 23.04.2026 நள்ளிரவு 12.00 மணிவரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 4.5.2026 அன்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல் நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் எப்எல்ஐ1, எப்எல்2 மற்றும் எப்எல்3 வரையிலான உரிம வளாகங்களை மூடப்படவேண்டும்.
அன்றைய தினங்களில் விற்பனை ஏதும் மேற்கொள்ள கூடாது என உத்திரவிடப்பட்டுள்ளது. மேற்கண்ட தினங்களில் இந்திய தயாரிப்பு அயல் நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் எப் எல்1, எப் எல்2 மற்றும் எப்எல் 3 வரையிலான உரிம வளாகங்களை திறந்தாலோ, மறைமுகமாக மதுவிற்பனை செய்தாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுப்பதாக மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
