வாகன சோதனையில் ரூ.80 ஆயிரம் பறிமுதல்

 

கிருஷ்ணராயபுரம், ஏப். 21: கிருஷ்ணராயபுரம்136 தனி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.1,40,500 பணம் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் 136 (தனி) சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதில் நேற்று காலை 9.19 மணியளவில் தேர்தல் பறக்கும் படை குழுவினர் சத்யா தலைமையில் பி.உடையாப்பட்டி பகுதியில் கண்காணிப்பு பணி மேற்கொண்ட பொழுது கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், தரகம்பட்டி, சின்னாம்பட்டி அஞ்சல், கோடங்கிப்பட்டி, மாவத்தூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ், என்பவர் தனது பைக்கில் உரிய ஆவணம் இன்றி எடுத்துவந்த ரூ.60,500 கைப்பற்றப்பட்டது.

Related Stories: