இறைத்தூதருக்குக் கீழ்ப்படியுங்கள்!

இறைத்தூதருக்குக் கீழ்ப்படிதல் குறித்து இறைவனே தன் திருமறையில் பல இடங்களில் வலியுறுத்துகிறான். குர்ஆன் ஓரிடத்தில் குறிப்பிடுகிறது. யார் இறைவனின் தூதருக்குக் கீழ்ப்படிகின்றாரோ அவர் உண்மையில் இறைவனுக்குக் கீழ்ப்படிபவர் ஆவார். மேலும் யாரேனும் புறக்கணித்து விட்டால் அவர்களின் பாதுகாவலராக நாம் உம்மை ஆக்கவில்லை.”(குர்ஆன் 4:80)

இறைவனின் தூதர் அவர்கள் கூறினார்கள்: “நான் ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்குக் கட்டளையிட்டால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்.” (ஆதாரம்: இப்னு மாஜா) று ஒரு சந்தர்ப்பத்தில் நபியவர்கள்(ஸல்) கூறினார்கள்: “நான் எதை (ச் செய்யுங்கள் என்றோ செய்ய வேண்டாம் என்றோ ஒன்றும் கூறாமல்) உங்களுடைய முடிவுக்கு விட்டுவிட்டேனோ அதைப் பற்றி எதுவும் கேட்காமல் நீங்களும் விட்டுவிடுங்கள்.

ஏனெனில் உங்களுக்கு முன்னிருந்தவர்கள் அழிந்ததெல்லாம் அவர்கள் தம் இறைத்தூதர்களிடம் தேவையின்றி வினா தொடுத்ததாலும் கருத்து வேறுபாடு கொண்டதாலும்தான். ஆகவே, ஒன்றைச் செய்யும்படி உங்களுக்கு நான் கட்டளையிட்டால் உங்களால் இயன்ற அளவு அதைக் கடைப்பிடியுங்கள். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்.” (இப்னு மாஜா) திலிருந்து இறைத்தூதருக்குக் கீழ்ப்படிதல் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிகிறது.

ஒருவர் மீது நமக்கு உண்மையிலேயே அன்பு இருக்குமானால் நாம் செய்யும் முதல் வேலை அவருடைய சொல்லுக்குக் கட்டுப்படுவதுதான். இதற்கு மாறாக, அவர் சொல்வது எதையும் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் அலட்சியப்படுத்திவிட்டு “உங்கள் மீது அன்பு வைத்திருக்கிறேன்” என்று சொல்வது உதட்டளவு அன்பாக இருக்குமே தவிர உண்மையான அன்பாக இருக்க முடியாது.

அதேபோல் ஒரு விஷயம் குறித்து இறைத்தூதர் எதையும் சொல்லாமல் விட்டுவிட்டார் எனில் அதைக் குறித்துத் தோண்டித் துருவிக் கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது. னெனில், இறைத்தூதரின் ஒவ்வொரு கட்டளையும் மார்க்கக் கடமையாகிவிடும் என்பதை மறந்து விடக் கூடாது. ஜ் வழிபாடு தொடர்பாக சட்டங்கள் அருளப்பட்டபோது “வசதி வாய்ப்பு உள்ளவர்கள் வாழ்நாளில் ஒருமுறை ஹஜ் செய்தால் போதும்” என்று சொல்லப்பட்டது. உடனே நபித்தோழர்கள் சிலர் ஆர்வமிகுதியால், “ஆண்டுதோறும் ஹஜ் செய்வது கடமையாகுமா?” என்று கேட்டார்கள். நபிகளார் எதுவும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

நபித்தோழர்கள் மீண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டதும் நபியவர்கள் கூறினார்கள்: “உங்களுக்கு என்ன கட்டளை இடப்படுகிறதோ அதைப் பின்பற்றுங்கள். உங்கள் கேள்விக்கு நான் ‘ஆம்’ என்று பதில் அளித்துவிட்டால் ஆண்டுதோறும் ஹஜ் செய்வது உங்கள் மீது கடமை ஆகிவிடும்” என்றார்கள். தற்குப் பிறகு தேவையற்ற கேள்விகள் கேட்பதைத் தோழர்கள் தவிர்த்துக் கொண்டார்கள். றைத்தூதருக்கு வாய்மையுடன் கீழ்ப்படிந்து வாழ்வோம்; மறுமையில் மகத்தான வெற்றிகளைப் பெறுவோம்.

இந்த வார சிந்தனை

“எவர் என் வழிமுறையை நேசிக்கிறாரோ அவர் என்னையே நேசித்தவர் ஆவார். எவர் என்னை நேசிக்கிறாரோ அவர் என்னுடன் கவனத்தில் இருப்பார். எவர் என் வழிமுறையை அலட்சியப்படுத்துகிறாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்.” – நபிமொழி.

– சிராஜுல்ஹஸன்

Related Stories: