லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 33½ சவரன் நகை கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலை

குன்னம், ஏப்.16: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் லப்பைக்குடிக்காடு பிலால் தெருவை சேர்ந்தவர் முகமது ஹனிபா மகன் ஷாஜகான் பாபு (66). இவர் என்எல்சி நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஷாஜகான் பாபு கடந்த 3.4.26ம் தேதி சென்னையில் உள்ள தன் மகள் வீட்டில் மருத்துவ பரிசோதனைக்கு சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று அதிகாலை 4.30 மணிக்கு வீட்டில் இருந்து 2 மர்ம நபர்கள் வெளிவந்து அருகில் இருந்த வாழை தோப்பு வழியாக சென்றதை பக்கத்து வீட்டுக்காரர் சர்ஜீன் அகமது பார்த்துள்ளார்.

அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ஷாஜகானுக்கு தகவல் அளித்துள்ளார். அவர் சென்னையிலிருந்து திரும்பி வந்து பார்க்கும் போது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 33½ சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து தகவலறிந்த வந்த மங்களமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Related Stories: