அரியலூர் அரசு மருத்துவக்கல்லுரியில் 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரியலூர், ஏப்.12: அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவாயிலில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி அரியலூர் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்றது. வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அழகிய கோலம் வரையப்பட்டு அதில் “100 % வாக்களிப்போம்” என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

இதனுடன், அரியலூர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் தர்மராஜ், தூய்மை இந்தியா மேற்பார்வையாளர்கள் வாசுகிசம்பத், சந்தியா, சிவரஞ்சனி ஆகாஷ் மற்றும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி வாக்களிப்பதின் அவசியம் குறித்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். மேலும், ஒவ்வொருவரும் தங்களது வாக்குரிமையை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி மூலம், தேர்தலில் அதிகளவில் மக்கள் பங்கேற்பை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கம் வலியுறுத்தப்பட்டது.

 

Related Stories: