ஆதனூர் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வழியனுப்பு விழா

பாடாலூர், ஏப்.9: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா ஆதனூர் அரசு உயர்நிலைப் பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இங்கு 30 மாணவர்கள் 10ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த மாணவ, மாணவிகள் அடுத்த கல்வியாண்டில் வேறு பள்ளிகளுக்கு செல்ல இருப்பதால் இவர்களுக்கு பிரிவு உபசாரம் மற்றும் வழியனுப்பு விழா நேற்று பள்ளியில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ஞானசேகரன் தலைமையில் நடந்த இந்த விழாவில் சக ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, 10ம் வகுப்பு முடிந்து செல்லும், மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் கேக் வெட்டி ஊட்டி விட்டனர். மேலும், வேறு பள்ளிக்கு 11ம் வகுப்பு செல்லும் நீங்கள் நன்றாக படித்து வாழ்வில் முன்னேற வேண்டும். உயர்கல்வி படிப்பை முடித்ததும் பெரிய நிறுவனங்களுக்கு பணிக்கு சென்று நம் நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும் என்று அறிவுரை வழங்கிய தலைமையாசிரியர் ஞானசேகரன், அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் புத்தகம் பரிசாக வழங்கினார்.

இந்நிகழ்வில் உதவி தலைமையாசிரியர் முத்தமிழ்ச்செல்வன், ஆசிரியர்கள் அசோகன், தனராசு, ஜெபசெல்வி, முத்துசாமி, நர்மதா, கண்ணகி, கௌசல்யா மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: