ரூ.100 கோடி நிலமோசடி வழக்கு; பழனி சார்பதிவாளரிடம் 7 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை

 

திண்டுக்கல்: பழனி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலத்தை ரூ.2 கோடிக்கு முறைகேடாக பதிவு செய்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு எஸ்பி ஷாஜிதா, டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை விசாரிக்க, அவருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியிருந்தது.

இதன்படி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் நேற்று காலை திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்திற்கு வந்தார். அவரிடம் சிபிசிஐடி எஸ்பி ஷாஜிதா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணை, சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. அப்போது அவரிடம் ஆகஸ்ட் 3ம் தேதி வரை தினமும் ஆஜராகும்படி சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: