நில மோசடி வழக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்குமூலம் பதிவு

 

கரூர்: கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாசுக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக கரூர் சார்-பதிவாளர் 2024ல் அளித்த புகார் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், கரூர் நகர காவல் ஆய்வாளராக இருந்த பிருத்விராஜ் ஆகியோர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிந்தனர். இந்த வழக்கு விசாரணைக்காக கரூர் ஜூடீசியல் மாஜிஸ்திரேட் எண்-1 நீதிபதி பரத்குமார் முன் எம்.ஆர்.விஜயபாஸ்கார் நேற்று ஆஜரானார். அப்போது, நில அபகரிப்பில் ஈடுபட்டதாக உங்கள் மீது தொடரப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஏற்கிறீர்களா என்று நீதிபதி கேட்டதற்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர், நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று தெரிவித்தார். அவரது வாக்குமூலம் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.

Related Stories: