அரியலூர் மாவட்ட அரசு ஊழியர்கள் ஓய்வூதியர்கள் மருத்துவ செலவு தொகை திரும்ப பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூர், ஜூலை 23: அரியலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளினி வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
”தமிழ்நாடு அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை 01.07.2026 முதல் 30.06.2031 வரை செயல்படுத்துவதற்கான ஆணைகளைப் பிறப்பித்துள்ளது. எனவே, முந்தைய ஆண்டுகளின் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களான 2021 (ஊழியர்களுக்கு) மற்றும் 2022 (ஓய்வூதியதாரர்களுக்கு) ஆகியவற்றின் கீழ் செலவுத் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகளை, மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் மாவட்ட அளவிலான அதிகாரமளிக்கப்பட்ட குழுவிடம் (District Level Empowered Committee) சமர்ப்பிக்க வேண்டும்.

ஆகவே, அரசு ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் அலுவலகங்கள் மூலமாகவும், ஓய்வூதியதாரர்கள் தாங்கள் ஓய்வூதியம் பெறும் கருவூலம் (Treasury) மூலமாகவும், மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் இக்கோரிக்கையை மாவட்ட அளவிலான அதிகாரமளிக்கப்பட்ட குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட கலெக்டர் மிருணாளினி, தெரிவித்துள்ளார்.

Related Stories: