கரூர், ஜூலை 23: கரூர் மாநகராட்சி கூட்ட அரங்கில் அப்புறப்படுத்தப்பட்ட முன்னாள் முதல்வர் ஸ்டாலின் படம் வைப்பது தொடர்பான பிரச்சனை மாநகராட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கரூர் மாநகராட்சி சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மேயர் கவிதா கணேசன் தலைமை வகித்தார். ஆணையர் பிரித்விராஜ் முன்னிலை வகித்தார். மண்டலத் தலைவர்கள் எஸ்.பி.கனகராஜ், வெங்கமேடு சக்திவேல், அன்பரசன், மாநகராட்சி பொறியாளர் சௌந்தரராஜன் முன்னிலை வகித்தனர். கூட்டம் ஆரம்பித்ததும் மண்டல தலைவர் எஸ் பி கனகராஜ், சுகாதார குழு தலைவர் பசுவை சக்திவேல் ஆகியோர் கூட்ட அரங்கில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் படம் அப்புறப்படுத்தப்பட்டதை மீண்டும் வைக்க வேண்டுமென ஆணையரிடம் முறையிட்டனர். அதற்கு ஆணையர் புரோட்டோகால்படி அரசு விதிமுறையின்படி முன்னாள் முதல்வர் படம் வைப்பதற்கு சட்டத்தில் இடம் இருந்தால் வைக்கப்படும் என உறுதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் பெருவாரியான உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் சரிவர நடைபெறவில்லை இதனை செய்து தர வேண்டும் என மேயருடன் கோரிக்கை வைத்தனர். இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் பொழுது மண்டலத்தலைவர் அன்பரசன், கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் கரூர் மாநகராட்சிக்கு செய்துள்ள திட்ட பணிகள் குறித்து அறிக்கை வெளியிட வேண்டுமென கேட்டுக்கொண்டார். மேயர் கவிதா கணேசன், திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து நகராட்சி அலுவலகத்தில் நேரில் தெரிந்து கொள்ளலாம்.
தொடர்ந்து கூட்டத்தில் கரூர் மாநகராட்சியில் பொது இடங்களில் குப்பை கொட்டினால், சிறுநீர் கழித்தால், வாகனங்கள் நிறுத்தினால் அபராதம் விதிக்கும் தீர்மானத்தை திமுகவினர் எதிர்ப்பால் ஒத்திவைக்கப்பட்டது.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கைதை கண்டித்து காங்கிரஸ் கவுன்சிலர் ஸ்டீபன்பாபு கருப்பு வில்லை அணிந்து பங்கேற்றார். மாநகராட்சி 1வது மண்டலக்குழு தலைவர் சக்திவேல் மேஜையில் அவரது இருக்கை முன் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி படங்களைவைத்திருந்தார்.
மாநகராட்சி 4வது மண்டலக்குழு தலைவர் எஸ்.பி.கனகராஜ்: கடந்த கூட்டத்தின் போது முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் படம் மாட்டியிருந்தோம். அவை தற்போது இல்லை. இதனை அகற்றியது யார், அகற்ற உத்தரவிட்டது யார். அப்போது காங்கிரஸ் கவுன்சிலர் ஸ்டீபன்பாபு குறுக்கிட்டு பேசினார். இதையடுத்து ஆத்திரமடைந்த கனகராஜ் நான் மேயரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன் நீங்கள் குறுக்கிடாதீர்கள். அமருங்கள் என தெரிவித்தார். மேயர் கவிதா: மக்கள் பிரச்னைகளை விவாதிப்பதை விட்டுவிட்டு முன்னாள் முதல்வர் படம் பிரச்சனை ஏற்படுவதை முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினே விரும்பமாட்டார் என்றார்.
மாநகராட்சி 1வது மண்டலக்குழு தலைவர் சக்திவேல்: மேலே ஏறி படங்களை மாட்டினால் பிரச்சனை ஏற்படும் என மேயர் தெரிவித்ததால் தான் அனுமதி கேட்கிறோம் என்றார். இதில் கடந்த கூட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கவேண்டிய முன்தொகை, வைப்புத்தொகை தொடர்பாக அவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். எனவே அவர்களுக்கான தொகை வழங்கவேண்டும் என்ற தீர்மானத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒத்திவைக்கப்பட்டது.
மாமன்ற உறுப்பினர் பசுவை சக்திவேல்: அவசரக்கூட்டத்தில் உள்ள தீர்மானங்கள் புரியவில்லை. எனவே இவற்றை ஒத்திவைத்து படித்து பார்த்தப்பிறகு நிறைவேற்றலாம் என்று கூறினார்.அவசரக்கூட்டத்தில், கரூர் மாநகராட்சியில் பொது இடங்களில் குப்பை கொட்டினால், சிறுநீர் கழித்தால், வாகன நிறுத்துமிடங்கள் இல்லாத இடங்களில் வாகனம் நிறுத்தினால் அபராதம் விதிப்பது தொடர்பான தீர்மானம் இடம் பெற்றிருந்தது. மாநகராட்சி மண்டலக்குழு தலைவர் எஸ்.பி.கனகராஜ்: இத்தீர்மானத்தை அனுமதித்ததால் திமுக மாநகராட்சியில் பொதுமக்களுக்கு அபராதம் விதித்ததாக மக்கள் தெரிவிப்பார்கள் எனவே இத்தீர்மானத்தை ஏற்கமாட்டோம் என்றார்.
இதனால் அவசரக்கூட்டத்தில் இத்தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டு ஏனைய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிமுக கவுன்சிலர்கள் தினேஷ், சுரேஷ் என இரு கவுன்சிலர்கள் இருந்த நிலையில் இருவரும் தவெகவில் இணைந்துவிட்டனர். கரூர் மாநகராட்சி 2வது மண்டலக்குழு தலைவர் அன்பரசன் தேர்தலுக்கு முன்பு திமுவில இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நிலையில் தற்போது தவெகவில் இணைந்துவிட்டார். இதனால் கரூர் மாநகராட்சி 2வது மண்டலக்குழு தலைவர் பதவி, 2 கவுன்சிலர்கள் என தேர்தலில் போட்டியிடாமலே தவெகவுக்கு 3 பதவிகள் கிடைத்துள்ளன. காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஸ்டீபன்பாபு, மஞ்சுளா, மா.கம்யூனிஸ்ட் கவுன்சிலர் தண்டபாணி என கூட்டணி கட்சியினர் உள்ளனர். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
