பெரம்பலூர், ஜூலை 23: பெரம்பலூர் மாவட்டத்தில் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID ) மற்றும் நலவாரிய பதிவு மேற்கொள்ளாத மாற்றுத் திறனாளிகளுக்கான வட்டார அளவிலான சிறப்புமுகாம் நடைபெற உள்ளது. மாவட்டக் கலெக்டர் ஷரண்யா அறி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிக்கான மருத்துவ சான்று பெற்று தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID ), நலவாரியத்தில் பதிவு செய்யாத மாற்றுத் திறனாளிகளுக்கு வட்டார அளவிலான சிறப்பு முகாம்கள் வருகிற 28ம்தேதி ஆலத்தார் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 30ஆம்தேதி வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், வருகிற ஆகஸ்ட் 4ம்தேதி வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், ஆகஸ்ட் 6ம்தேதி பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை நடைபெற உள்ளது .
எனவே, தனித்துவம் வாய்ந்த மாற்றுத்திறனாளி அடையாள அட்டைக்கு இதுவரை பதிவு செய்யாதவர்கள், மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவ சான்று அசல் மற்றும் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் -1, ஆதார் அட்டை நகல் மற்றும் ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்ட எண்ணுடன் கூடிய கைபேசி ஆகியவற்றுடன் இந்த முகாமில் நேரில் கலந்து கொண்டு பயன்பெறலாம் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
