பிரதமர், முதல்வர்களை பதவியில் இருந்து நீக்கும் மசோதா மீதும் மேலும் விவாதம்: வரைவு அறிக்கையை ஏற்பது ஒத்திவைப்பு

 

புதுடெல்லி: தீவிர குற்றச்சாட்டுக்களின் பேரில் 30 நாட்கள் சிறையில் இருக்கும் பிரதமர், ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் மாநில முதல்வர்களை பதவியில் இருந்து நீக்குவதற்கான மசோதாவை ஆய்வு செய்யும் 130வது திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுவானது சமீபத்தில் உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்பட்ட தனது வரைவு அறிக்கையில் ஐந்து பரிந்துரைகளை முன்வைத்திருந்தது.

நேற்று ஒவ்வொரு பரிந்துரை மீதும் தனித்தனியாக வாக்கெடுப்பு நடத்தவிருந்தது இந்நிலையில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கூடுதல் ஆலோசனைகளும் உறுப்பினர்களிடையே கூடுதல் விவாதங்களும் தேவை என்று குழு முடிவு செய்துள்ளதாக குழுவின் தலைவர் அபராஜிதா சாரங்கி தெரிவித்துள்ளார்.

Related Stories: