திருமலை: ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதுவரையிலும் 12 ேபருக்கு தொற்று உறுதி ெசய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் 26ம் தேதி முதல் நேற்று வரை 12 பேருக்கு கோவிட் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக கடப்பா, குண்டூர் மற்றும் காக்கிநாடா மாவட்டங்களில் பாதிப்புகள்அதிகம் உள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் வீட்டுத் தனிமையில் உள்ள நிலையில், 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும், கொரோனா தொற்று பாதிப்புகள் மீண்டும் பதிவாகி வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
ஆந்திர மருத்துவ மற்றும் சுகாதாரத் துறை மக்களை விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்துகின்றனர். நாடு முழுவதும் பல நகரங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், மக்கள் மீண்டும் கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கின் வருகையை நினைவுகூர்கின்றனர். கடந்த 2020ம் ஆண்டின் கடுமையான சூழ்நிலையை நோக்கி நாம் செல்கிறோமோ என்ற கவலை மீண்டும் மக்களிடையே பதற்றத்தை உருவாக்குகிறது. இருப்பினும், மக்கள் பீதியடையத் தேவையில்லை என்று மருத்துவ நிபுணர்கள், டாக்டர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜனைத் தயார் நிலையில் வைத்திருக்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
