டெல்லி: வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படுவதால் குடியுரிமையை இழந்ததாக அர்த்தம் இல்லை என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. எஸ்.ஐ.ஆர். பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படுவதால் தானாகவே குடியுரிமை இழந்ததாக கருத முடியாது. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படுவதால் மட்டுமே குடியுரிமை பறிபோனதாக கருத முடியாது. குடியுரிமையை தீர்மானிப்பதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையத்திடம் இல்லை என உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
