நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை தொடக்கம்: அரியானாவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

 

ஜிந்த்: பசுமைப் போக்குவரத்து மற்றும் சுயசார்பு தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் நோக்கில், ஜிந்த்-சோனிபட் வழித்தடத்தில் நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் ரயில் சேவை நேற்று தொடங்கப்பட்டது. பள்ளி மாணவர்கள் பலரும் பயணித்த ஜிந்த் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த ரயில்லை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த அதிநவீன ரயில், ஜிந்த் சந்திப்பு, கோஹானா சந்திப்பு மற்றும் சோனிபட் ஆகிய நகர்ங்களை இணைக்கிறது.

இதன் மூலம் ஹைட்ரஜன் ரயில்களை இயக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. மேலும் ரயில்வே துறையில் தூய்மையான மற்றும் நிலையான போக்குவரத்து முறையை நோக்கி ஒரு முக்கிய மைல் கல்லாகும். ஜிந்த் மற்றும் சோனிபட் இடையிலான 89 கிலோமீட்டர் தூரத்தை இந்த ரயில் இரண்டு மணி நேரத்தில் கடக்கும். பயணத்தின்போது 12 இடைப்பட்ட ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.

Related Stories: