ஏற்காடு, ஏலகிரியில் ரோப் வே திட்டம்: விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் டெண்டர்!

சென்னை: தமிழகத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மலை பிரதேசங்களுக்கு பொதுமக்கள் எளிதாக சென்று வரும் வகையில் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்காடு, ஏலகிரி ஆகிய மலைப்பிரதேச சுற்றுலாத்தலங்களில் ரோப் கார் அமைப்பதற்கான திட்டம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் டெண்டர் கோரியுள்ளது. எவ்வளவு தூரத்துக்கு ரோப் கார் வழித்தடம் அமைக்க சாத்தியக்கூறு உள்ளது என ஆய்வு செய்யப்பட உள்ளது. எந்த இடத்தில் இருந்து எந்த இடத்திற்கு ரோப் கார் வழித்தடம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்த பின்னர் அடுத்த கட்ட பணிகள் தொடங்கும் என சுற்றுலாத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post ஏற்காடு, ஏலகிரியில் ரோப் வே திட்டம்: விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் டெண்டர்! appeared first on Dinakaran.

Related Stories: