வேலை செய்த நகை பட்டறையில் அரை கிலோ தங்கம் திருடிய வடமாநில வாலிபர்கள் கைது

பெரம்பூர்: கொடுங்கையூர் எருக்கஞ்சேரி கிருஷ்ணமூர்த்தி சாலையை சேர்ந்த உத்தம் (28), கொடுங்கையூர் சின்னாண்டி மடம் பகுதியில் நகை பட்டறை நடத்தி வருகிறார். இங்கு, கடந்த 18ம் தேதி, மேற்குவங்க மாநிலம் சர்பூர் டோல் பகுதியை சேர்ந்த பாபி சன்த்ரா (31) என்பவர் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில், கடந்த 20ம் தேதி இங்கிருந்து அரை கிலோ தங்கத்துடன் பாபி சின்த்ரா தலைமறைவானார். புகாரின்பேரில், கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து, பாபியின் செல்போன் சிக்னலை கண்காணித்தபோது, சொந்த ஊரில் இருப்பது தெரிந்தது. தனிப்படை போலீசார் அங்கு சென்று, அவரையும், அவரது கூட்டாளியான மேற்கு வங்க மாநிலம் பாரா கவுகத் பகுதியை சேர்ந்த பலாஸ் கோனை (25) ஆகிய இருவரை கைது செய்தனர். இவரிடமிருந்து 415 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், பலாஸ் கோனை, கடந்த ஒரு மாதமாக உத்தமிடம் வேலை செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியில் சேர்ந்த பாபி என்பவருடன் நட்பு ஏற்பட்டு இருவரும் நகைகளை திருடி செல்ல திட்டம் தீட்டினர். அதன்படி, பலாஸ் கோனை சில நாட்களுக்கு முன்பே வேலையிலிருந்து நின்று விட்டார். பின்னர், பட்டறையில் யாரும் இல்லாதபோது, பாபி நகையுடன் சொந்த ஊர் தப்பியது தெரியவந்தது. அங்கு குறிப்பிட்ட சில நகைகளை மட்டும் அடகு வைத்து பணத்தை பெற்றுக்கொண்டு மீதி நகைகளை அடகு வைக்க திட்டம் தீட்டியபோது போலீசார் அவர்களை சுற்றிவளைத்து கைது செய்தது தெரியவநதது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட பாபி சன்த்ரா மற்றும் பலாஸ் கோனை ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post வேலை செய்த நகை பட்டறையில் அரை கிலோ தங்கம் திருடிய வடமாநில வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: