பெண்ணை அரிவாளால் வெட்டியவருக்கு 4 ஆண்டு சிறை

 

திருவாடானை, ஏப். 22: முன்விரோதம் காரணமாக பெண்ணை அரிவாளால் வெட்டியவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி ராமநாதபுரம் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. திருவாடானை அருகே கீழக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ் (47). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணியன் (63)ஆகிய இருவருக்கும் இடத்தகராறு சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தர்மராஜன் தாய் அமுதா கடந்த 2017 ம் ஆண்டு தாவாவிற்கு உட்பட்ட இடத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை வெட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன் அரிவாளால் அமுதாவை வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அமுதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து அவரது மகன் தர்மராஜ் திருவாடானை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு கைது செய்தனர். இந்த வழக்கானது ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நீதித்துறை மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று முன் தினம் தீர்ப்பு வழங்கிய நீதிபதி கவிதா பெண்ணை அரிவாளால் வெட்டிய சுப்பிரமணியனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

The post பெண்ணை அரிவாளால் வெட்டியவருக்கு 4 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Related Stories: