கோரிக்கைகளை வலியுறுத்தில் டிட்டோ ஜாக் அமைப்பினர் தர்ணா போராட்டம்

அறந்தாங்கி, ஜூலை 4: அரசாணை 243ஐ திரும்பபெற வேண்டி அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலக அறையில் தரையில் அமர்ந்து டிட்டோ ஜாக் அமைப்பினர் தர்ணா போராட்டம் நடத்தினர். இதில் 46 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் அருகே தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தர்ணா போராட்டத்தில் தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு இதுவரை இருந்து வந்த ஒன்றிய அளவிலான முன்னுரிமை என்கிற நிலையை மாற்றி மாநில அளவிலான முன்னுரிமை என்பதற்கான அரசாணை எண் 243 ஐ ரத்து செய்ய வேண்டும். அரசாணை 243 -ன்படி நடைபெற உள்ள ஆசிரியர்கள் கலந்தாய்வு பொது மாறுதலை ரத்து செய்ய வேண்டும். மூன்று அமைச்சர்கள் கொண்ட குழுவுடன் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் போது ஏற்றுக்கொண்ட 12 அம்ச கோரிக்கைகளான எமிஸ் வலைதள பதிவில் இருந்து ஆசிரியர்களை முற்றிலும் விடுவிக்க வேண்டும்.
ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அல்லாத பல்வேறு பிற பணிகளை வழங்குவதை கைவிட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் டிட்டோஜாக் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட 46 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

The post கோரிக்கைகளை வலியுறுத்தில் டிட்டோ ஜாக் அமைப்பினர் தர்ணா போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: