டெல்டாவில் குறுவை சாகுபடியில் மந்தம் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு

தஞ்சாவூர், ஜூலை 4: தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிக கட் ஆப் மதிப்பெண்களுடன் கல்லூரியில் சேர்ந்த மாணவி யமுனாதேவி (396), மற்றும் பிரின்சி மெல் பா (396) தேசியக்கொடி ஏற்றினர். அதற்கு அடுத்த நிலையில் கட் ஆப் மதிப்பெண்கள் பெற்ற நிலோர் நிஷா (395), லட்சுமி பிரியதர்ஷினி (394), அபிராமி (390), கலையரசி (390), லோகேஸ்வரி (390) குத்துவிளக்கேற்றினர்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் ஜான் பீட்டர் தலைமை வகித்தார். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பொறுப்பிலுள்ள காவல்துறை அலுவலர் கலைவாணி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உரையாற்றினார். கல்லூரி தேர்வு நெறியாளர் மலர்விழி, நிதியாளர் ராஜாராமன் மற்றும் அனைத்துத் துறைத் தலைவர்கள் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இரண்டாம் ஆண்டு மூன்றாம் ஆண்டு மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அனைத்து முதலாம் ஆண்டு மாணவிகளுக்கும் இனிப்பு மற்றும் மலர்கள் கொடுத்து வரவேற்கப் பட்டது. விழாவினை முன்னாள் மாணவியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தனர்.

பேராவூரணி: பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் திருமலைச்சாமி தலைமை வகித்தார். முன்தாக தமிழ்த்துறை தலைவர் ராணி வரவேற்றார். தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க நிறுவனத்தலைவர் ஸ்ரீதர் முதலாம் ஆண்டு வகுப்பை தொடங்கி வைத்தார். மாணவர்களை வாழ்த்திப் பேசினார்.

விழாவில் ஆங்கிலத் துறை தலைவர் ராஜ்மோகன், வணிகவியல் துறை தலைவர் பழனிவேலு மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வணிக நிர்வாகவியல் துறை தலைவர் ஞானசேகரன் நன்றி கூறினார்.

The post டெல்டாவில் குறுவை சாகுபடியில் மந்தம் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: