இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் திடீரென ஜலகண்டேஸ்வரர் சென்றுவந்த தேரின் மேற்பகுதியில் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனை அவ்வழியாக சென்ற பக்தர்கள் பார்த்து அருகில் உள்ள தீயணைப்புத்துறைக்கு தெரிவித்தனர். வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் தேரின் வலது மேற்பகுதி உச்சியில் லேசாக கருகியது. தகவலறிந்து வந்தவாசி தெற்கு போலீசார் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இன்று காலை தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
The post வந்தவாசியில் தேரோட்டம் முடிந்த நிலையில் ஜலகண்டேஸ்வரர் கோயில் தேரில் தீ appeared first on Dinakaran.