வந்தே பாரத் ரயில் மீது மீண்டும் கல்வீச்சு: கர்நாடகாவில் 2வது முறையாக அட்டூழியம்

பெங்களூரு: கர்நாடகாவில் இரண்டாவது முறையாக வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு சம்பவம் நடந்ததால், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுகின்றன. சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்தாலும் கூட, ஆங்காங்கே கல்வீச்சு சம்பவங்கள் அரங்கேறுகின்றன. அந்த வகையில் கர்நாடகா மாநிலத்தில் ​​தார்வாட் – பெங்களூரு வழித்தடத்தில் சென்ற வந்தே பாரத் ரயிலின் மீது மர்மநபர்கள் நேற்று 3.30 மணியளவில் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

தாவங்கரே என்ற இடத்தை வந்தே பாரத் ரயில் கடந்து சென்ற போது, கற்கள் வீசப்பட்டன. இதனால் ரயிலின் சி-4 பெட்டி சேதமடைந்தது. பயணிகளுக்கு எவ்வித காயம் ஏற்படவில்லை என்றும், ரயில் பயணத்தில் எவ்வித இடையூறும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர். இது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதற்கு முன், கர்நாடகாவில் மற்றொரு முறை வந்தே பாரத் ரயில் மீது கல் வீச்சு சம்பவம் நடந்தது. அதாவது பிப்ரவரி 26ம் தேதியன்று மைசூர் – சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், கிருஷ்ணராஜபுரம் – பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தை கடந்து சென்ற போது கல்வீச்சு நடந்தது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட குற்றவாளியை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post வந்தே பாரத் ரயில் மீது மீண்டும் கல்வீச்சு: கர்நாடகாவில் 2வது முறையாக அட்டூழியம் appeared first on Dinakaran.

Related Stories: