செல்போன் கட்டண உயர்வை ஒரே மாதிரியாக அறிவித்தது எப்படி?.. செல்போன் வாடிக்கையாளர்கள் மீது ரூ.35,000 கோடி சுமை: ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்..!!

டெல்லி: செல்போன் கட்டண உயர்வு மூலம் 109 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் மீது ரூ.35,000 கோடி சுமை ஏற்றியுள்ளது என்று காங்கிரஸ் குற்றச்சாட்டியுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா;

கட்டண உயர்வை ஒரே மாதிரியாக அறிவித்தது எப்படி?
கட்டண உயர்வு அறிவித்துள்ள ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவன முதலீடு, வருமானம், சேவை அளவில் மாறுபாடு உள்ளது. ஆனால் கட்டண உயர்வை மட்டும் 3 நிறுவனங்களும் 15 முதல் 20% கட்டண உயர்வை ஒரே மாதிரியாக அறிவித்தது எப்படி?. எந்த கட்டுப்பாடும் இன்றி 3 செல்போன் நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள ஒன்றிய அரசு அனுமதித்தது ஏன்? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

செல்போன் கட்டண உயர்வு: மோடி அரசு மீது புகார்
செல்போன் கட்டண உயர்வு விவகாரத்தில் மோடி அரசு தனது கடமையை செய்ய தவறிவிட்டதாகவும்,
ஒன்றிய அரசு கடமை தவறியதன் மூலம் செல்போன் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் குற்றச்சாட்டியுள்ளது.

செல்போன் வாடிக்கையாளர்கள் மீது ரூ.35,000 கோடி சுமை
நாட்டில் 92% செல்போன் சேவை தரும் 3 நிறுவனங்கள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்த அனுமதித்தது எப்படி?. ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்கள் 48 மணி நேரத்துக்குள் ஒரே மாதிரியாக கட்டண உயர்வை அறிவித்தது எப்படி? என்று ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.

109 கோடி வாடிக்கையாளர்கள் மீது சுமை: காங்கிரஸ்
தனியார் செல்போன் நிறுவனங்கள் லாபமடைய உதவுவதன் மூலம் 109 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் மீது சுமை ஏற்றப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்துவது பற்றி எந்த கட்டுப்பாடுகளையும் மோடி அரசு விதிக்கவில்லை என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

செல்போன் நிறுவனங்களுக்கு மோடி அரசு உதவுகிறது: காங்கிரஸ்
தேர்தலுக்காக கட்டண உயர்வு நிறுத்திவைக்கப்பட்டு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதா எனவும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், 109 கோடி வாடிக்கையாளர்களை பாதிக்கும் கட்டண உயர்வு விவகாரத்தில் மோடி அரசு, டிராய் கண்ணை மூடிக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

 

The post செல்போன் கட்டண உயர்வை ஒரே மாதிரியாக அறிவித்தது எப்படி?.. செல்போன் வாடிக்கையாளர்கள் மீது ரூ.35,000 கோடி சுமை: ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Related Stories: