இந்த நிலையில், விவேக் ராமசாமி குடியரசு கட்சியினரிடையே ஆதரவு மெல்ல அதிகரித்து வருவதாக சி.என்.என் பல்கலைக்கழகம் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. கருத்து கணிப்பின்படி டொனல்ட் டிரம்பிற்கு குடியரசு கட்சியின் 39% உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது. விவேக் ராமசாமி தற்போதைய நிலையில் 13% ஆதரவுடன் டிரம்பிற்கு அடுத்த இடத்தில் உள்ளார். மற்றொரு இந்திய வம்சாவளி போட்டியாளரான நிக்கி ஹேலே 12% ஆதரவுடன் 3-வது இடத்திலும், நியூ ஜெர்சியின் முன்னாள் கவர்னர் கிருஸ் கிறிஸ்டி 11% ஆதரவுடன் 4-வது இடத்திலும் உள்ளதாக சி.என்.என் தெரிவித்துள்ளது.
The post அமெரிக்க அதிபருக்கான குடியரசு கட்சி வேட்பாளர் தேர்தல்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமிக்கு 2-வது இடம் appeared first on Dinakaran.