டியூஷன் படிக்க வந்த 10ம் வகுப்பு மாணவனிடம் விடிய விடிய ஆபாச சாட்டிங்: பள்ளி ஆசிரியை கைது

திருச்சி: திருச்சி அருகே டியூஷன் படிக்க வந்த 10 ம் வகுப்பு மாணவனிடம் விடிய விடிய ஆபாச சாட்டிங்கில் ஈடுபட்ட துறையூர் பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் அருகே உள்ள வலையப்பட்டியை சேர்ந்தவர் தேவி(40). இவர் துறையூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கணித ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர் துறையூரிலேயே வசித்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக அவரும், அவரது கணவரும் கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவரிடம் டியூஷன் படித்த 10ம் வகுப்பு மாணவரின் செயல்பாடுகளில் சந்தேகமடைந்த பெற்றோர் மகனின் நடவடிக்கையை கண்காணித்தனர். அப்போது நள்ளிரவு தாண்டியும் அந்த மாணவர் ஆசிரியை தேவியுடன் செல்போனில் அதிக நேரம் பேசியதும், ஆபாச சாட்டிங் செய்ததும் ெதரியவந்தது. இதனால் மாணவர் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். ஆசிரியை தான் மாணவரிடம், தொடர்ந்து இவ்வாறு சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுபற்றி மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் முசிறி அனைத்து மகளிர் போலீசார் ஆசிரியை தேவியின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் ேநற்று வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அந்த மாணவர் குழந்தைகள் நல காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

The post டியூஷன் படிக்க வந்த 10ம் வகுப்பு மாணவனிடம் விடிய விடிய ஆபாச சாட்டிங்: பள்ளி ஆசிரியை கைது appeared first on Dinakaran.

Related Stories: