திருத்தணி- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் ரூ.12.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம்: கட்டுமான பணிகளை அதிகாரிகள் ஆய்வு

திருத்தணி : புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். திருத்தணி நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் தடுப்பதற்கும் தற்போதுள்ள குறுகிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்துவதற்கு இடவசதியில்லாததால், திருத்தணி- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை, அரசு போக்குவரத்து பணிமனை அருகே, நான்கரை ஏக்கர் பரப்பில், ரூ.12.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் கடந்தாண்டு ஆக.9ம் தேதி துவக்கி வைக்கப்பட்டது. தற்போது, பணிகள் துவக்கி பேருந்து நிலையத்திற்கு தூண்கள் அமைக்கும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் திருத்தணி நகர்மன்ற தலைவர் சரஸ்வதி, துணைத் தலைவர் சாமிராஜ், ஆணையர் அருள், நகராட்சி பொறியாளர் விஜயராஜ்காமராஜ் பொதுப்பணி மேற்பார்வையாளர் நாகராஜ் ஆகியோர் புதிய பஸ் நிலைய பணிகளை நேரில் வந்து ஆய்வு செய்தனர். அப்போது, நகர்மன்ற தலைவர் சரஸ்வதிபூபதி பேசுகையில், ஒப்பந்ததாரர் பணிகளை துரித வேகத்தில் செய்து வருகிறார். ஆகையால், நடப்பாண்டு டிசம்பர் மாதத்திற்குள் புதிய பேருந்து நிலைய பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு விடுவதற்கு திட்டமிட்டுள்ளோம்.

இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டால் திருத்தணி பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என கூறினார். இந்த ஆய்வின் போது, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் திருத்தணி எம்.பூபதி, திருத்தணி தி.மு.க., நகர செயலாளர் வினோத்குமார், நகராட்சி கவுன்சிலர்கள் பிரசாத், லோகநாதன், தீபாரஞ்சினிவினோத்குமார், குமுதாகணேசன், அப்துல்லா,விஜயசத்யாரமேஷ், பார்வதி, சண்முகவள்ளி ஆறுமுகம், நாகராஜ்மேஸ்திரி உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.

The post திருத்தணி- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் ரூ.12.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம்: கட்டுமான பணிகளை அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: