செங்கல்பட்டில் புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம்

செங்கல்பட்டு: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை கண்டித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் அசோசியேஷன் சார்பில் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு நீதிமன்றம் எதிரே செங்கல்பட்டு பார் அசோசியேசன் சார்பில் 200-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு பார் அசோசியேஷன் தலைவர் ஆனந்தீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை தடை செய்ய வலியுறுத்தியும், புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகைகள் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வழக்கறிஞர்கள் செங்கல்பட்டு – திண்டிவனம் சாலையை மறித்து தீடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது

இந்த போராட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பின் தலைவர் மாரப்பன், கௌரவ தலைவர் அய்யாவு, மண்டல செயலாளர் பழனிசாமி, செங்கல்பட்டு பார் அசோசியேஷன் செயலாளர் குமரேசன், மூத்த வழக்கறிஞர் கனகராஜ் என 200-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துக்கொண்டனர்.

The post செங்கல்பட்டில் புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: