திருச்சியில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை அதிகரிக்க ரூ.600 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: திருச்சியில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை அதிகரிக்க ரூ.600 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும் எனவும் இதன் மூலமாக 10,000 பேருக்கு ஐடி துறையில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

திருச்சியில் 10 லட்சம் சதுர அடியில் 10,000 பேருக்கு வேலை வழங்கும் வகையில் ரூ.600 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் காரணியில் சுமார் 3,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 250 ஏக்கர் பரப்பளவில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்புத்துறை சார்ந்த மின்னணுவியல் மற்றும் பாதுகாப்பு தொழில் பூங்கா அமைக்கப்படும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

மேலும் “டைசல் உயிரியின் முகவரி” என்ற பெயரில் சென்னை, கோவையில் ரூ.10 கோடியில் டைசில் புத்தாக்க மையங்கள் அமைக்கப்படும் எனவும் காரைக்குடி, ராசிபுரத்தில் ரூ.70 மதிப்பீட்டில் டைடல் பார்க் அமைக்கப்படும் எனவும் பஞ்சப்பூரில் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட உள்ளதாகவும் சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

The post திருச்சியில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை அதிகரிக்க ரூ.600 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.

Related Stories: