தொண்டி பகுதியில் ஆபத்தான நிலையில் மின் கம்பங்கள்

 

தொண்டி, ஏப்.27: தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான மின் கம்பங்கள் சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது. இதை மாற்றவும் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் உள்ள மின் கம்பம் 30 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டதாக உள்ளது. 20க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் மேல் பாகம் உடைந்தும் கீழ்பாகம் அரித்தும் எப்போதும் வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. இதேபோல் பல இடங்களில் மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறது. பலத்த காற்று அடிக்கும் போது அறுந்து விழுகிறது. கடந்த காலங்களில் இதுபோன்ற விபத்துகளில் கால்நடைகள் பலியாகியுள்ளது. மேலும் விபத்து நடக்கும் முன்பு பழுதடைந்துள்ள அனைத்து மின் கம்பங்களையும் மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கலந்தர் ஆசிக் கூறியது, ‘‘தொண்டி பேரூராட்சியில் பல இடங்களில் மின் கம்பங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளது. குறிப்பாக தொண்டி தெற்கு தெரு, சேகு சாகிபு தெரு, தெற்கு தோப்பு, புதுக்குடி கடற்கரை பகுதி, பாவோடி மைதானம், பெரிய பள்ளிவாசல், காந்தி நகர், சின்ன தொண்டி என் ஏகப்பட்ட இடங்களில் மின் கம்பங்கள் ஆபத்தை விளைவிக்கும் விதமாக உள்ளது. சில இடங்களில் மின் கம்பங்கள் தாழ்வாக செல்கிறது. இதை சீர் செய்ய கோரி தலைமை செயலர் உட்பட மின்வாரிய உயர் அதிகாரிகள் அனைவருக்கும் மனு அனுப்பியுள்ளேன். உரிய நடவடிக்கை விரைவில் எடுக்க வேண்டும்’’ என்றார்.

The post தொண்டி பகுதியில் ஆபத்தான நிலையில் மின் கம்பங்கள் appeared first on Dinakaran.

Related Stories: