பொன்னமராவதியில் இருந்து திருச்செந்தூருக்கு அரசு பேருந்து வசதி ஏற்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தல்

 

பொன்னமராவதி,மே22: பொன்னமராவதியில் இருந்து திருச்செந்தூர், சிவகாசிக்கு பஸ் வசதி செய்யவேண்டும் என இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒரு தாலுகா தலைநகர் ஆகும். அத்துடன் வளர்ந்து வரும் ஒரு நகரமாகும். இங்கிருந்து தொழில் நகரமான சிவகாசி மற்றும் ஆன்மிக நகரமான திருச்செந்தூர் போன்ற நகரங்களுக்கு நேரடியாக பேருந்து வசதி இல்லை. குறிப்பாக மதுரை வரை மட்டுமே தென் மாவட்ட பேருந்து உள்ளது.

இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள், நோயாளிகள் தென்மாவட்டங்களுக்கு செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. எனவே பொது நலன் கருதி தென்மாவட்டங்களை இனைக்கும் வகையில் பொன்னமராவதியில் இருந்து, திருச்செந்தூர், சிவகாசி ஆகிய ஊர்களுக்கு நேரடியாக பேருந்து சேவை துவக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை ஆகும். எனவே போக்குவரத்து துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்து இப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post பொன்னமராவதியில் இருந்து திருச்செந்தூருக்கு அரசு பேருந்து வசதி ஏற்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: