அக்கட்சிபட்டி கிராமத்தில் தென்னங்கீற்று பின்னும் ஆர்வத்தில் சிறுவர்கள் கைத்தொழில் கற்று கொடுக்கும் பெற்றோர்

 

கந்தர்வகோட்டை,மே 22: அக்கட்சிபட்டி கிராமத்தில் சிறுவர்கள் தென்னங் கீற்றுப்பின்னும் தொழிலில் ஈடுபட்டுள்ளது. பெற்றோர்கள் சிறுவர்களுக்கு கற்று கொடுக்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள அக்கச்சிப்பட்டி கிராமத்தில் மழையின் காரணமாக கீற்று வீடுகளுக்கு புதியதாக தென்னைகீற்று வாங்கி மேய்ந்து வருகிறனர். கந்தர்வகோட்டை அருகே உள்ள தோப்புகளில் தென்னை மட்டைகளை வாங்கி வந்து அதனை கீற்றாக முடைந்து வருகிறனர்.

இவ்வாறு சுயமாக பின்னி மேயப்படும் கீற்று வீடு சில ஆண்டுகளுக்கு ஒழுகாமல் இருக்கும் என்று கூறுகின்றனர். இதில் ஒரு குடும்பதை சேர்ந்த பெண் கோடை விடுமுறையில் உள்ள தனது குழந்தைகளுக்கு கீற்றமுடைய கற்றுத் தந்த வருகிறார். அவர் கூறும் போது, விடுமுறை நாட்களை வீணாக கழிக்காமல் ஏதேனும் கைத்தொழில், விவசாய வேலைகளை நான் குழந்தைகளுக்கு கற்றுத் தருகிறேன் என்கிறார். மேலும் இதுபோன்று பயிற்சி அளிக்கும் போது குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை கூடும் என்று கூறுகிறார்.

The post அக்கட்சிபட்டி கிராமத்தில் தென்னங்கீற்று பின்னும் ஆர்வத்தில் சிறுவர்கள் கைத்தொழில் கற்று கொடுக்கும் பெற்றோர் appeared first on Dinakaran.

Related Stories: