துறையூர் அருகே ஆட்டுக்கு தழை பறித்த பெண் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழப்பு

 

துறையூர், மே 22: துறையூர் அருகே ஆட்டுக்கு தழை பறித்துக் கொண்டிருந்த போது கிணற்றுக்குள்ள தவறி விழுந்த பெண் நீரில் மூழ்கி உயிரிழந்தார். துறையூர் அருகேயுள்ள பகளவாடி அடுத்த ஈச்சம்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பிரபு (30). ஏசி மெக்கானிக். இவரது மனைவி திவ்யா(28). இவர் நேற்று அப்பகுதியிலிருந்த கிணற்று மேட்டில் ஆட்டுக்கு இலைதழை பறித்தாராம்.

அப்போது அவர் அருகிலிருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்து துறையூர் தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் பாலசந்தர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் நேரில் சென்று திவ்யாவின் சடலத்தை மீட்டு புலிவலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். உடனே சடலத்தை உடற்கூராய்வுக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

The post துறையூர் அருகே ஆட்டுக்கு தழை பறித்த பெண் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: