தஞ்சாவூர், மே22: தஞ்சாவூர் நெடுஞ்சாலை நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் கோட்டத்தில் தஞ்சாவூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர் வட்டம் மாத்தூர் ஒத்தவீடு கிராமங்களை இணைக்கும் வகையில் குடமுருட்டி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலப் பணியினை சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்புப்பொறியாளர் திரு.பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது சேலம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப்பொறியாளர் துரை, தஞ்சாவூர் நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் கோட்டப்பொறியாளர் சரவணன், திருச்சி தரக்கட்டுப்பாடு கோட்டப்பொறியாளர் சிவக்குமார், உதவிக்கோட்டப் பொறியாளர்கள் மற்றும் உதவிப்பொறியாளர்கள் உடன் இருந்தனர். பாலத்தின் அளவீடு மற்றும் உறுதித் தன்மையினை இக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
The post குடமுருட்டி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பாலப்பணி appeared first on Dinakaran.