பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி நினைவுநாள் அனுசரிப்பு

 

பெரம்பலூர்,மே22: பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சி சார்பாக முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. முன்னாள் பாரத பிரதமர் ராஜிவ் காந்தியின் 33வது நினைவு நாளை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி யின் சார்பாக பெரம்பலூர் புதுபஸ்டாண்டு தென்புறம் உள்ள காமராஜர் சிலை யில் இருந்து புதியபேருந்து நிலையம் நுழைவு வாயிலில் உள்ள உழவர் தந்தை நாராயணசாமி சிலை வரை ஊர்வலமாக சென்று ராஜிவ் காந்தி படத்திற்கு மாலை அணி வித்து மலர்கள் தூவி மரியாதை
செய்யப் பட்டது.

பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சுரேஷ் தலைமையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் வட்டாரத் தலைவர்கள் ரங்கராஜ், செந்தமிழ் செல்வன், விஜயகுமார், செந்தில்குமார், சுப்பிர மணியன், பாக்யராஜ், மாவட்ட துணைத் தலைவர் கள் ஆசைத் தம்பி,அருணா ச்சலம் நல்லசாமி, பெரம்ப லூர் நகர தலைவர் ராஜா என்கிற சேட்டு, மாவட்ட பொதுச் செயலாளர் சுப்பிர மணியன், மாவட்ட பொரு ளாளர் மனோகரன் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி நினைவுநாள் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: