நாகப்பட்டினத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் சட்ட நகல் எரிப்பு

 

நாகப்பட்டினம்,மே22: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட ஆதரவாக செயல்படும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் சட்ட நகல் எரிப்பு போராட்டம் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் அவுரித்திடலில் நேற்று நடந்தது. விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநில அமைப்பு செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட செயலாளர் கமல்ராம், மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசிற்கு ஆதரவாக செயல்படும் காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டிப்பது, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் வகையில் நிறைவேற்றிய தீர்மானத்தை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பினர். பின்னர் காவிரி மேலாண்மை ஆணையத்தின் சட்டநகலை எரிக்க முயற்சி செய்தனர். அப்போது டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி சட்ட நகல் காப்பிகளை பறிமுதல் செய்தனர்.

The post நாகப்பட்டினத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் சட்ட நகல் எரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: