தென்காசி பகுதிகளில் தொடர் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் கோடையை மிஞ்சும் அளவில் வெயில் வாட்டிய நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக அவ்வப்போது தொடர் சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை முதல் கனமழை பெய்தது. இதனால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயின்அருவி மற்றும் ஐந்தருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. மாவட்டத்தில் இன்று காலையிலும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் தொடர்ந்து அருவிகளுக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்த வண்ணம் உள்ளது. குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இன்றைய காலை நிலவரப்படி ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை நீடித்து வருகிறது.

The post தென்காசி பகுதிகளில் தொடர் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை appeared first on Dinakaran.

Related Stories: